ஆளுநர் நாகரிகமாக பேசணும் ஊடகத்தில் வெளிவருவதற்காக அடிக்கடி இது போன்று பேசினால் நாக்கு புண்ணாகிவிடும் என்று திருநாவுக்கரசு (Thirunavukarasu)எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மண்டலம் 5க்கு உட்பட்ட 24. வதுவார்டு பகுதியில் உயர் மின் விளக்கு மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்(Thirunavukarasu )தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து வார்டு பகுதி மக்களிடம் வார்டு பகுதியில் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களாக பெற்றார்.
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில்,
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது கொரோனா காலகட்டத்தில் பத்து கோடியில் ரூபாய் பிரதமர் நிறுத்திவிட்டார்.எனக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எல்லா எம்பிக்கும் அந்த இரண்டு வருடம் எம்பி நிதியிலிருந்து எதுவும் கொடுக்க முடியவில்லை,
போன வருஷம் பிரித்து கொடுத்த நிதியில் இருந்து இந்த வருஷம் இந்த வார்டில் உயர் மின் விளக்கு அமைத்துள்ளோம் குடிநீர் டேங்க் அமைத்துள்ளோம் இதுபோன்று வார்டுகளுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை கொடுத்துள்ளோம்,
கொடுக்காத 33வார்டுகளுக்கு குடிநீர் தொட்டி பைப் போடுவதற்கு ஒரு கோடி ரூபாய் இந்த வருஷம் நிதியிலிருந்து மாநகராட்சிக்கு கொடுப்பதாக சொல்லி இருக்கிறேன்,
எந்த கட்சி கவுன்சிலராக இருந்தாலும் அந்த கட்சி வார்டு கவுன்சிலருக்கு ஒதுக்கி தரப்படுகிறது அந்த பணி நடக்கும், அதன் விவரங்கள் கலெக்டரிடம் கொடுக்கப்படும்,மேலும் இதுபோன்று நேரடியாக வார்டு மக்களை சந்தித்து எம்பி நிதியில் இருந்து மட்டும் இல்லாமல் தமிழக அரசு தரக்கூடிய உதவிகள் பெற்று தருகிறோம்,வார்டுகளில் என்ன குறை உள்ளதோ அதை மனுவாக பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
ஆளுநரை பொறுத்தவரை இந்த அரசாங்கத்தை குறை சொல்வது அல்லது முதலமைச்சரை விமர்சனம் செய்வது கொள்கைகளை விமர்சிப்பது போன்று பண்ணிக் கொண்டுள்ளார்,
ஒவ்வொரு நடவடிக்கையும் விமர்சிப்பதால் அதில் அர்த்தமே இல்லை,
வரம்பு மீறி ஆளுநர் செயல்படுகிறார், முதலமைச்சர் தொழில் முதலீடு பெறுவதற்காக வெளிநாடு போக கூடாதுனா? பிரதமர் வெளிநாடு போறாரே அவர் மட்டும் எதுக்கு போறாரு?
இது எல்லா மாநில முதலமைச்சரும் செய்யக்கூடியது இது சகஜம்
இதில் என்ன அவருக்கு வருத்தம் ஆளுநருக்கு என்ன சங்கடம் அவர் பாக்கெட்டில் இருந்து பணம் கொடுக்கிறாரா? செலவு பண்ணுறாரா?தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து போறாரு முதலமைச்சர் முறையில் போகிறார்.
இது வந்து ஒரு ரசனை குறைவான விமர்சனம் ஒரு ஆளுநருக்கு இது அழகல்ல அதற்கு ஒரு லிமிட் இருக்கு அந்த லிமிட்டோடு நாகரிகமாக பேசணும் பத்திரிக்கை ஊடகத்தில் வெளிவருவதற்காக அடிக்கடி சொறிஞ்சு விட்டாருன்னா என்றால் புண்ணாகிவிடும்.
மருத்துவ கல்லூரிகளுக்கு ஆய்வு கமிட்டி வந்துள்ளது.சென்னையில் உள்ள கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் விடுபட்ட கல்லூரிகளுக்கு போவார்கள் அதில் எதுவும் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்து தமிழக அரசு பெற முயற்சி செய்ய வேண்டும் அதை திரும்பி பெற வேண்டும் என்று கூறினார்.
இதில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் எல்.ரெக்ஸ், வக்கீல் சந்திரன், புத்தூர் சார்லஸ்,மலர் வெங்கடேசன், ஜி.எம்.ஜி.மகேந்திரன், சிவா,செந்தூர் வாசன்,எஸ் .சி. பிரிவு பாக்கியராஜ்,மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.