பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக ஜிபி முத்து ( gp muthu ) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிக் பாஸ் வீட்டின் கேப்டனுக்கான டாஸ்க் நடந்தது.இந்த டாஸ்க்கில்சாந்தி மாஸ்டர்,ஜனனி மற்றும் ஜி.பி.முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த போட்டியின் ஆரமித்திலேயெ சாந்தி மாஸ்டர் வெளியேற ஜி.பி.முத்து மற்றும் ஜனனி இடையே போட்டி நிலவியது.
போட்டியின் இறுதியில் ஜனனி தோற்றுப் போக ஜி.பி.முத்து அந்த டாஸ்கிணை வென்றார்.இதனால் பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராக ஜி.பி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.வீட்டிற்கு வெளியே அனைவராலும் தலைவர் என்று அழைக்கப்படும் ஜிபி முத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே முதல் தலைவராக மாறியுள்ளார்.மேலும் ஜிபி முத்துவின் ரசிகர்கள் தற்போது ஜி.பி முத்துவை கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. இதற்கு சனிகிழமை நடந்த எபிசோடில் கமல் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில்நேற்று மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.