Site icon ITamilTv

பிரபல பாடகி புற்றுநோயால் காலமானார்…! பிரபலங்கள் இரங்கல்…!

Spread the love

74 வயதாகும் கிராமிய விருது பெற்ற “பாயிண்டர் சிஸ்டர்ஸ்” குழுவின் பாடகியான (popular singer) அனிதா பாயிண்டர் புற்றுநோயால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

1970கள் மற்றும் 1980களில் இவர் “ஃபயர்”, “சே ஸோ”, “ஹி இஸ் சோ ஷை”, “ஸ்லோ ஹேண்ட்” மற்றும் “ஐ அம் சோ எக்சிட்டட்” என அவர்களின் இசைக்குழு உலகளாவிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், 1975ல் இவர்களின் குழு கிராமிய விருதை வென்றது.

இந்நிலையில், 1969ல் ஜூன் மற்றும் போனி என இரட்டை சகோதரிகளின் குழுவில் இணைந்தார். இவர்களுடன் இணைந்த பிறகு முன்னதாக பார்த்த வேலையை விட்டுவிட்டார்.

இதனையடுத்து, ஜூன், போனி, அனிதா, ரூத் என நால்வர் அணியாக மாறினர். ஆனால், போனி சிறிது காலத்திற்கு பிறகு இசைக்குழுவை விட்டு வெளியேறி விட்டார். மேலும், பாய்ன்டர் சகோதரிகளுக்கு ஃபிரிட்ஸ் மற்றும் ஆரோன் என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.

இந்நிலையில், 2003ல் அனிதாவின் மகள் ஜடா இறந்த பிறகு, அனிதா தனது பேத்தியை வளர்த்து வந்தார் . இந்நிலையில், அனிதா உயிரிழந்த நிலையில், அவருடைய மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “அனிதாவின் இழப்பால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம், ஆனால் அவர் இப்போது தனது மகள் ஜடா மற்றும் சகோதரிகள் ஜூன் மற்றும் போனியுடன் நிம்மதியாக இருக்கிறார் என நம்புகிறோம். குடும்பத்தின் மீதான அவரது அன்பு என்றும் வாழும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அனிதாவின் (popular singer) இறப்பிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version