வயநாடு நிலச்சரிவில் இருந்து தப்பிக்க தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த போது எங்களை 3 காட்டு யானைகள் எல்லைச்சாமியாக நின்று காப்பாற்றியதாக பாட்டி மற்றும் பேத்தி உருவகமாக தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் . பல வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் ,மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் இருந்து தப்பிக்க தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்த போது எங்களை 3 காட்டு யானைகள் எல்லைச்சாமியாக நின்று காப்பாற்றியதாக பாட்டி மற்றும் பேத்தி உருவகமாக தெரிவித்துள்ளனர்.
இந்த வினோத சம்பவம் குறித்து விளக்கமாக கூறிய பாட்டி கூறியதாவது :
நிலச்சரிவின்போது இடிந்து விழுந்த வீட்டில் இருந்து என் பேத்தியை தூக்கிக்கொண்டு, அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றுவிட்டேன். அங்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக 3 காட்டு யானைகள் நின்றன.
“நாங்கள் சாவில் இருந்து மீண்டு இங்கு வந்துள்ளோம். எங்களை விட்டுவிடு, எதுவும் செய்துவிடாதே” என கெஞ்சினேன். அப்போது முன்னால் நின்ற யானையின் கண்கள் கலங்கியதை பார்த்தேன். நானும் என் பேத்தியும் அந்த யானையின் காலடியில் உட்கார்ந்துவிட்டோம்.
அடுத்த நாள் மீட்புக்குழுவினர் வரும் வரை 3 யானைகளும் எங்களை பாதுகாத்தன. எந்த கடவுள் எங்களை காப்பாற்றியதோ தெரியவில்லை என சுஜாதா என்ற மூதாட்டி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.