சிறையில் உயிருக்கு போராடும் முன்னாள் அமைச்சர்.. நடந்தது என்ன?

பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட உள்ள டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினருமான சத்யேந்தர் ஜெயின்(SatyendarJain )இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்யேந்தர் ஜெயின்(SatyendarJain) கடந்த ஓராண்டுக் காலமாகச் சிறையில் அடைக்கப்பட்ட உள்ளார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளியல் அறையில் கீழே விழுந்தார். அதில் அவருக்கு முதுகுத் தண்டில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் இடுப்பில் பெல்ட் கட்டியவாறு நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்டதிலிருந்து 32 கிலோ எடையைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் மருத்துவமனையில் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.சிறையில் அடைக்கப்பட்ட சத்யேந்தர் ஜெயின் குறித்தது ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சத்யேந்தர் ஜெயினை கொல்ல பாஜக திட்டமிட்டு வருவதாகவும் ,அவரது உடல்நிலை சீரடைய பிராத்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts