லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது .
உலக பிரசித்தி பெற்ற வழிபாடு தளங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது பக்தர்களின் விண்ணைப் பிளக்கும் அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி இன்று அதிகாலை முதல் கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து பக்தி முழக்கம் எழுப்பி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
2668 அடி உயர மலை உச்சியில் 350 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 4,500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணியை வைத்து மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.