Site icon ITamilTv

கடலுக்குள் காரை இழுத்துச் சென்ற சூறாவளி – வைரல் வீடியோ!!

Spread the love

கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

கிரீஸ் நாட்டின் வடக்கே சில நாட்களுக்கு முன் காட்டுத்தீயால் பலத்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது அங்கு சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கிரீஸ் நாட்டில் கடந்த செப். 4ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து டேனியல் என்ற சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், பாலம் ஒன்றும் இடிந்து விழுந்தது. மேலும், சூறாவளியால் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

இதனால், 20-க்கும் மேற்பட்ட கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகள், தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

கிரீஸ் நாட்டில் சூறாவளியால் பலத்த காற்று வீசி வரும் இந்த சூழலில், பெலியான் நகரில் ஏஜியோஸ் லோவன்னிஸ் பகுதியில், கார் ஒன்று சூறாவளி காற்றால் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த சூறாவளி பாதிப்புக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் மேலும், 3 பேரை காணவில்லை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கிரீஸ் நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது டேனியல் சூறாவளியால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதனிடையே, கார் ஒன்றை சூறாவளிக் காற்று கடலுக்குள் இழுத்த்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Spread the love
Exit mobile version