”TNPSC Group_4 ல் 10,000 காலிப் பணியிடங்கள்..”உடனடியா நிரப்புங்க..அரசுக்கு கோரிக்கை வைத்த திருமா!!

தமிழ்நாட்டில்TNPSC Group_4 ல் 10,000 காலிப் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை(Thirumavalavan) விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன்(Thirumavalavan )TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group_4 நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால்,கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000 பேருக்கான வாய்ப்புப்பறிபோயுள்ளது.

இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Total
0
Shares
Related Posts