GT bowlers blasted by RCB : ஐபிஎல் 2024 இன் 45 ஆவது லீக் சுற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதினர்.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களம் இறங்கினர்.
இதில் சஹா 5 ரன்களிலும் ஷுப்மன் கில் 16 ரன்கள் இன்னும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : திடீர் சீனப் பயணம்…. இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க்!
அடுத்ததாக டேவிட் மில்லர் சாய் சுதர்ஷனுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் டேவிட் மில்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுப்பக்கம் சாய் சுதர்ஷன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இவரது சிறப்பான விளையாட்டால் குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது.
21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்ஸி மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.
முந்தைய ஆட்டத்தைப் போலவே டு பிளெஸ்ஸி 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
இவரை தொடர்ந்து களம் இறங்கிய வில் ஜாக்ஸ் சிறப்பாக செயல்பட்டார். நல்ல பார்ட்னர்ஷிப்பாக அமைந்த விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் குஜராத் பவுலர்கள் திணறினர்.
விராட் கோலி மற்றும் வில் ஜாக்ஸ் இருவரின் அரை சதங்கள் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16 ஓவர்கள் முடிவில் 26 ரன்கள் எடுத்தது.
இதில் விராட் கோலி 70 ரன்கள் வில் ஜாக்ஸ் 100 ரன்கள் என கடைசி வரை களத்தில் இருந்தனர். இதனை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது GT bowlers blasted by RCB.
இதையும் படிங்க : ஆண் என நினைத்து பெண் நீர்யானையை வளர்த்த பூங்கா!