Site icon ITamilTv

டெல்லியின் அதிரடியான பந்து வீச்சால் 89 ரன்களிலேயே சுருண்டது குஜராத்

Spread the love

 

IPL 2024, விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ( DC VS GT ) நேற்று புதன்கிழமை நடந்த லீக் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. தனது சொந்த மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸின் இன்னிங்க்ஸை, கேப்டன் சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா தொடங்கினர். போட்டி தொடங்கி சில வினாடிகளிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஆட்டம் கண்டது.

இஷாந்த் சர்மாவின் 2வது ஒவேரில், கில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, முகேஷ் குமாரின ஒவரில் சாஹா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்து களமிறங்கிய வீரர்களும் சுமாராகவே ஆடினார். சாய் சுதர்சன் 12 ரன்னிலும், டேவிட் மில்லர் 2 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

பவர் பிலே முடியும் முன்னரே குஜராத் டைட்டன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்த நிலையில், பவர் பிலே முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பல தடுமாற்றத்திற்கு பிறகு 17வது ஒவரில் ரஷீத் கான் ஒரு சிக்ஸர் அடித்தார், தொடர்ந்து 31 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அதே ஒவேரில் பெவிலியன் திரும்பினார்.

17.3 ஓவர் கள்முடிவில் ஆல் அவுட் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

Also Read : https://itamiltv.com/nayanar-nagendrans-case-will-be-heard-today-bjp-members-in-tension/

இலக்கு சிறியதாக இருந்தாலும், ரன் ரேட்டை ஏற்ற இதுவே சிறந்த வாய்ப்பு என்பதை அறிந்து கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி ஆரம்பத்திலிருந்தே தனது சரமாரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்கள் ஒருபுறம் சரிந்தாலும், பேட்ஸ்மேன்கள் சிக்ஸ், ஃபோர் என விளாசி ரசிகர்களை மகிச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிரடியான ( DC VS GT )  ஆட்டத்தால் 8.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 


Spread the love
Exit mobile version