நெல்லை அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருடுபோய்யுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனது பாதுகாப்புக்காக சொந்தமாக வாங்கப்பட்ட லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்கள் திருப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பஞ்சாபில் தற்போது பணியாற்றி வரும் அழகு, தனது பாதுகாப்புக்காக சொந்தமான லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை, சமூகரெங்கபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்துள்ளார்.
Also Read : மகாராஷ்டிரா முதலமைச்சராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்நாவிஸ்..!!
வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பீரோவை உடைத்து துப்பாக்கி, தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் தன்னிடம் கூறிய நிலையில் அழகு நெல்லை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.