அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் , மாணவகர்கள் , திரைபிரபலங்கள் என பலரும் கடும் கண்டன்ம தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இச்சம்பவம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அண்ணா பல்கலை. மாணவர்களுடன் துணை நிற்கிறேன்; குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்; அவரைப் போன்றவர்களை வெளியே விடக்கூடாது என தனது X தள பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.