தமிழர்களுக்கு மட்டும் இல்லை தமிழுக்கும் முதல் எதிரி திராவிடம் தான் என தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு பாஜக மூத்த தலைவரும் செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா வழிபாடு நடத்த வருகை தந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, அண்ணாமலையை தொடர்ந்து “பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவனர் ”தமிழைத் தேடி” என்ற யாத்திரையை சொல்லப்போகிறார் என்ற கேள்விக்கு,
பதில் அளித்த அவர், தமிழைத் தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தானே பொருள். தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால், திராவிடத்தை அழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
தமிழ் மொழிக்கு முதல் எதிரியே திராவிடம் தான் மேலும் திராவிடத்தை அழிக்காத வரை தமிழை காக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து உங்கள் பாஜக நிலைபாடு என்ற கேள்விக்கு, நாங்கள் அங்கம் வகிக்கக் கூடிய அதிமுக கூட்டணி நிச்சயம் வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தினை நடைமுறைப் படுத்துவோம்” என கூறினர்.
ஆனால் இன்றும் அது போன்ற நல்ல திட்டங்கள் எதையும் திமுக செய்யவில்லை என்று தெரிவித்தார்.