நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்தியன் 2 திரைப்படம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் பிக் பாஸ் சீசன் 6 என மிகவும் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே நடிகர் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வர இருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார் நடிகர் கமலஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை 2023 பட குழுவினர் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் எச் வினோத்தின் கதையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இயக்குனர் அரசியல் சார்ந்த ஒரு கதையை கையில் எடுத்திருப்பதாகவும் இந்தியன் 2 திரைப்படத்தின் கால்ஷீட் முடிந்தவுடன் கால்ஷீட் ஒதுக்க கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி இணைய உள்ளார் ஏற்கனவே நடிகர் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது இவர்களது கூட்டணியை மீண்டும் எதிர்பார்த்து சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்