Site icon ITamilTv

வியக்க வைத்த ஹாக்கா நடனம் : நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிர வைத்த மௌரி எம்.பி..!!

Maori MP

Maori MP

Spread the love

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மவோரி மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மசோதாவை கிழித்த பெண் எம்.பியின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரிட்டிஷ் அரசர், மௌரி மக்கள் இடையேயான 184 ஆண்டுகள் பழமையான வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வரும் சர்ச்சைக்குரிய மசோதா மீதான வாக்கெடுப்பின் போது தான் நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Also Read : கிண்டி மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் மரணம் – கிண்டி மருத்துவமனை விளக்கம்..!!

நாடாளுமன்றத்தில் தனது மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதாவின் பேப்பரை கிழித்த மௌரி எம்.பி. ஹனா-ராஹிட்டி மைபி-கிளார்க் ஹாக்கா நடனமாடி எதிர்ப்பு தெரிவித்தார் அவரின் கர்ஜனையை கேட்ட மற்ற எம்.பி.க்களும் அவருடன் நடனத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடியினர் உரிமைகளில் முன்னணி நாடாக நியூசிலாந்து அறியப்படும் நிலையில், அந்த உரிமைகளை இந்த மசோதா ஆபத்தில் ஆழ்த்தும் என இதை எதிர்ப்பவர்கள் அஞ்சுகின்றனர்.


Spread the love
Exit mobile version