குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது . அந்தவகையில் தற்போது சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்களை நிரப்ப வரும் பிப்.8 மற்றும் 23ம் தேதிகளில் குரூப் 2 முதன்மை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்காக பல ஆயிரம் பதிவு செய்திருந்த நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.