ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற ஹமாஸ் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களின் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் தீரா பகையின் காரணமாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.
இந்த கோர தாக்குதலில் இஸ்ரேலில் வசிக்கும் பல அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அது மட்டும் இன்றி 100க்கும் மேற்பட்டோரையும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
Also Read : SBI ரிவார்டு பாயிண்ட்ஸ் மோசடி – 2 மாதத்தில் 73 வழக்குகள் பதிவு..!!
ஹமாஸ் அமைப்பினரின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களின் எஞ்சிய நிலப்பரப்பின் மீது இடைவிடா தாக்குதல்களை நடத்தி வருகிறது .
ஹமாஸ் அமைப்பை வேரோடு அழிக்க வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் இரவு பகலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது ஹமாஸ் அமைப்பின் இயக்க தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்மாயில் ஹனியே கடந்த 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.