வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப இந்தியாவிடம் வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.
வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்ற நிலையில், அந்நாட்டில் பிரதமராக ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவே போராட்டக் குழுவினரின் முக்கியமான கோரிக்கையாக இருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தனது நாட்டை விட்டு வெளியேறினார்.
Also Read : தமிழ்நாட்டில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி..!!
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பி வந்தார்.
இந்நிலையில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு எழுத்துப்பூர்வ முறையில் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.