சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பிறந்தநாளான இன்று அவரின் சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்து சியான் விக்ரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தனது முதல் படமான ஆதித்ய வர்மா படத்தின் மூலமாக தனது நடிப்புத் திறமையை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்டியவர் துருவ் விக்ரம்.
நடிகர் சியான் விக்ரமை போலவே நடிப்பில் அசத்தி வரும் அவரது மகன் துருவ் விக்ரம் 1995ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி பிறந்தார். இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வரும் துருவ் விக்ரமுக்கு அவரது ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான துருவ் விக்ரம் தனது முதல் படத்திலேயே வெறித்தனமாக நடித்து இருந்தார்.
அப்பா புலியை விட குட்டிப் புலி இன்னும் அதிகமாக பாயும் என்பதை நிரூபித்து வரும் துருவ் விக்ரம் பல குரல்களில் பேசுவது, இசை மீது ஆர்வம், சிக்ஸ் பேக் வைத்தல் என பலவற்றிலும் சியான் விக்ரமுக்கு சற்றும் சளைக்காதவராய் அதிரடி காட்டி வருகிறார்.
இந்நிலையில், துருவ் விக்ரம் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சியான் விக்ரம் அவரது ட்விட்டர் பக்கத்தில், துருவ விக்ரமின் சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.