ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஹரிகரன் த.மா.கா.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஏற்கனவே 11 பேர் கைதாகி உள்ள நிலையில் நேற்று பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹரிகரன், சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் , பின்னர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடைத்தனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஹரிகரன் த.மா.கா.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Also Read : ரேசனில் பருப்பு இல்லை – ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தேமுதிக..!!
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட திரு. K. ஹரிஹரன் அவர்கள் இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று முதல் த.மா.கா வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.