வங்கதேசத்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனாவின் அடைக்கலம் தற்காலிகமானதே என இந்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்ற நிலையில், அந்நாட்டின் பிரதமாராக இருந்து வந்த ஷேக் ஹசீனா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவே போராட்டக் குழுவினரின் முக்கியமான கோரிக்கையாக இருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தான் வசித்து வந்த பிரதமர் இல்லத்தை விட்டு உடனே வெளியேறினார்.
இதையடுத்து வங்கதேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்வதாகவும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் கட்டாயம் நிறைவேற்றும் எனவும் அந்நாட்டின் ராணுவ தளபதி தெரிவித்தார்.
Also Read : கோவை காவல்துறை நடத்திய அதிரடி வேட்டை – 2 ஆண்டுகளில் ரூ.3.71 கோடி செல்போன்கள் மீட்பு..!!
இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அடைக்கலம் தேடி இந்தியா வந்துள்ள ஹசீனாவுக்கு இந்திய அரசும் அடைக்கலம் கொடுத்துள்ளது . இதுகுறித்து இணையத்தில் சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது இதுகுறித்து இந்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
வங்கதேச உள்நாட்டுக் கலவரம் காரணமாகத் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசினாவுக்கு தற்காலிகமாக இங்கு தங்கும் அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது
ஹசீனா பிரிட்டனுக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளதால், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.