hawala money | சென்னை மிண்ட் தெருவில் வழக்கம் போல் ஏழுகிணறு போலீசார் ரோந்து பணியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சோதனையிட்டனர் .
அப்போது,பதற்றமடைந்த நந்த நபர்கள் போலீசாரிடமிருந்து தப்பி,அருகில் உள்ள ஒரு அலுவலகத்துக்குள் புகுந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பின் தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர்.
இதையும் படிங்க: ”தொடரும் மெட்ரோ ரயில் பணிகள்” மார்ச் 3 தேதி மட்டும்..- மக்களே உஷார்!
அப்போது சோதனை செய்த அந்த பையில், ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக குஜராத்தை சேர்ந்த பார்த்படேல், அஸ்வின் பட்டேல் மற்றும் மின்ட் தெருவில் ஒரு அலுவலகத்தில் இருந்த பிரஜேஷ் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வைத்திருந்தது துபாயில் இருந்து பெறப்பட்ட ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. மூன்று பேரும் கமிஷனுக்காக வேலை செய்வதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1763818476932825518?s=20
இதை அடுத்து, பூக்கடை காவல் உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, ஏழுகிணறு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர், தீவிர விசாரணைக்கு பின் மூன்று பேரையும் பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் இந்த நிகழ்விற்கு பின்னல் யாரும் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.