Site icon ITamilTv

”எல்லாத்துக்கும் காரணம் நாங்கதான் ” பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம்..?

Spread the love

காபுலில் உள்ள குருத்வாரா மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சீக்கியர் ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், ஆப்கானில் இருந்து இந்தியா வர விண்ணப்பித்திருந்தவர்களில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் 100 பேருக்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் இந்திய அரசு இ-விசா வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருதுவாரா மீது நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ,எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இத்தாக்குதலில் குருதுவாராவின் முஸ்லீம் காவலர் ஒருவரும் சீக்கியர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தாலிபன் அரசு தெரிவித்திருந்த நிலையில், 50 பேர் கொல்லப்பட்டதாக தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளனர்


Spread the love
Exit mobile version