Headlines _ கலைஞரின் 8 அடி உயர முழு உருவ சிலை
திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்!
Headlines – குடியரசுத் தலைவர் விருது
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமென்டண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது
மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி உடையாடுகிறார்
தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று உடையாடுகிறார்.
https://x.com/ITamilTVNews/status/1750385175975141876?s=20
சுமார் 5,000 இடங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரதமருடனான உரையாடலில் இணைய உள்ளனர்!
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்.வி.கங்காபூர்வாலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மக்களவைத் தேர்தல் அறிக்கை – அதிமுக ஆலோசனை கூட்டம்
மக்களவைத் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
பொன்னையன், செம்மலை, பா. வளர்மதி, O.S. மணியன் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்
நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : Keelakarai ஜல்லிக்கட்டு : 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.