Headlines : பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் 3ம் சுற்றில் 8 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் முன்னிலை வகிக்கிறார்.
சாமந்திப்பூ விலை சரிவு
ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையால், மகசூல் அதிகரித்து, மலர் சந்தையில் சாமந்திப்பூ விலை குறைந்தது. இதனால், பொங்கல் பண்டிகை விற்பனையை ஏமாற்றம் அளித்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தங்கம் விலை சரிவு
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 16 ஆம் தேதி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.78.00க்கும் ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து சனாதன துறவி என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1747150590751523249?s=20
பிரதமர் தமிழ்நாடு வருகை
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் ஆகியவற்றில் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடர், தமிழ்நாட்டில் வருகிற 19 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%81-palamedu-jallikattu-2024/
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ராமேஸ்வரம் செல்லும் அவர், 20 அல்லது 21 ஆம் தேதிகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Headlines : ஹவுதீஸ் மீது குண்டுவீச்சு தொடரும் – அமெரிக்கா
அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதீஸ் இயக்கத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. ஹவுதீஸ் மீது குண்டுவீச்சு தொடரும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.