40 நாய்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் வாக்குமூலம்.. வெலவெலத்த நீதிபதி!!

அமெரிக்காவை சேர்ந்த ஆடம் பிரிட்டன் என்ற 51 வயது நபர் பிபிசி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்களின் தயாரிப்புகளில் விலங்கியல் நிபுணராக பணியாற்றியவர். இவர் வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக கல்விப் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

முதலைகளை கையாள்வதில் மிகவும் தேர்ச்சி பெற்ற இவரை ‘முதலை’ மனிதர் என்று தான் அமெரிக்காவில் அழைப்பார்களாம். இவருக்கு விலங்குகளை பலாத்காரம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாம். அதிலும் நாய்கள் என்றால் கூடுதல் ஸ்பெஷல் கவனம் செலுத்துவாராம். நாய்களை குறிவைத்து, பலாத்காரம் செய்தும், அவை தொடர்பான வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் ஆடம் பிரிட்டன்.

ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்ற நிலையில், வடக்கு ஆஸ்திரேலிய சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்தது. அந்த விசாரணையில், மொத்தம் 56 விலங்குகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் வீடியோக்களை பரப்பியதாக ஆடம் பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்போது அவருடைய வாக்குமூலத்தில், விலங்குகளை துன்புறுத்தி, சாகும்வரை அந்த விலங்குகளை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதையெல்லாம் கேட்டு நீதிமன்றமே கதிகலங்கி போய்விட்டது. இது தொடர்பான வாதங்கள் கோர்ட்டில் நடக்கும்போது, பாதுகாப்பு ஊழியர்களையும், பொதுமக்களையும், வழக்கு நடக்கும் அந்த இடத்தைவிட்டே வெளியேறுமாறு நீதிபதி உதவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இவர் நாய்களை பலாத்காரம் செய்வதற்காகவே, ஸ்பெஷலாக ரூம் ஒன்றையும் டிசைன் செய்து அதற்கு டார்ச்சர் ரூம் என்று பெயரும் வைத்திருக்கிறார்.

இப்படி ஒவ்வொரு முறை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்கும்போதும், தன்னுடைய முகத்தை மறைத்து கொண்டு முகம் இல்லாத வெறும் பாலியல் வீடியோக்களை மட்டும் இணையத்தில் போஸ்ட் செய்து வந்துள்ளார்.

மேலும், இவரை போலவே நாய்கள் மீது காமவெறி உள்ளவர்களை தேடிப்பிடித்து அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து டெலகிராம் மூலம் க்ரூப் ஒன்றை உருவாக்கி உள்ளார். வீடுகளில் வளர்க்கப்படும் கொழுகொழு, செழிப்பான நாய்களை தனியாக குறி வைத்து இதற்காகவே ஒரு விளம்பரமும் செய்திருக்கிறார்.

“நீண்ட தொலைவுக்கு வீடு மாறுபவர்கள் அல்லது வேறு எங்காவது டிரான்ஸ்பர் ஆகி செல்பவர்கள் நீங்கள் வளர்க்கும் நாய்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அதனால், என்னிடம் விட்டு செல்லுங்கள், தனியாக பராமரிப்பு மையத்தை நான் செயல்படுத்துகிறேன்” என்று விளம்பரப்படுத்தி உள்ளார்.

ஆடம் பிரிட்டன் உலகமறிந்த விலங்கு நிபுணர் என்பதால், அவர் மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை.. ஒரே ஒரு பெண் மட்டும், ஆடம் பிரிட்டனின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் அடைந்து அவர் மீது புகார் தந்த நிலையில், அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு இப்போது எல்லா குற்றத்தையும் ஒப்புக் கொண்டு அனைத்து வாக்குமூலத்தையும் கொடுத்து சரண்டர் ஆகியுள்ளார்.

Total
0
Shares
Related Posts