கனமழை காரணமாக நவ.24 முதல் 27 ஆம் தேதி வரை சதுரகிரி மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
பெரு மழை பெய்தாலோ பெரு வெள்ளம் ஏற்பட்டாலோ குறிப்பிட்ட வழிமுறைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .
இந்நினையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அடுத்து வரும் 24 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சதுரகிரி மலையேறத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வழங்கப்பட்டிருந்த அனுமதியை வனத்துறை ரத்து செய்துள்ளது.