Heavy rain in Kenya : கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நகரின் சில பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டன.
இதையும் படிங்க : பெட்ரோல் குண்டு வீச்சு.. திமுக பிரமுகருக்கு தொடர்பு! TTV.தினகரன்!
இந்த கனமழையால் நாடு முழுவதும் 23 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 110,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் 27,716 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் அழிந்துள்ளது.
கனமழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 5,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Heavy rain in Kenya : இதுகுறித்து கென்யா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது..
“கென்யாவில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது.. சில பகுதிகளில் ஒரே நாளில் 200 மிமீ வரை மழை பெய்துள்ளது.
வெள்ளம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களை மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் மீட்புப் பணிகளும் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : மே 6ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை