தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழையம் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது .
இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
அதன்படி, இன்றும் தமிழகத்தில் கோவை உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
( ஆக.20) இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
கோவை , கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.