தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் 11ம் தேதியும்,
Also Read : சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப இன்னும் 8 மாதம் ஆகுமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 12ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் அன்மை தகவல்களுக்கு ஏற்ப தமிழ்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அதிக காற்று வீசும் நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமுடன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.