மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ( rain alert ) அருகே உள்ள மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.
இதனால் ஆனந்த குளியலை போடலாம் என ஆசையுடன் வந்த சுற்றுலா பயணிகள் திரும்பி செல்லும் சூழல் ஏற்பட்டது.
இதேபோல் இந்த பக்கம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் ஏற்பட்டிருந்த வெள்ளப் பெருக்கு மெல் மெல்ல குறைந்து வருவதால் அங்கு நீர் வரத்து சீரான நிலையில் பல நாட்களுக்கு பின்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Also Read : யானை வழித்தடம் குறித்த விவகாரம் – அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்..!!
ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் நீரில் சுற்றுலாப் பயணிகள் ஆதிகளவில் வந்து ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர் .
இதுமட்டுமின்றி தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ( rain alert ) இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது