ITamilTv

நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்… 4 பேர் பலி… அதிர்ச்சி வீடியோ..!

Spread the love

ஆஸ்திரேலியாவில், நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட (helicopters collide) விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரையின் அருகே “சீ வேல்டு தீம் பார்க்” என்ற கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது.

கடற்கரையில் கேளிக்கை பூங்கா உள்ளதால் இந்த இடம் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனையடுத்து, இத பூங்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

helicopters collide

இந்நிலையில், இந்த கேளிக்கை பூங்கா அருகே உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து இன்று மதியம் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. மேலும், அதே சமயத்தில், மற்றொரு ஹெலிகாப்டரும் தரையிறங்குவதற்காக கீழே இறங்கியது.

அப்போது திடீரென, எதிர்பாராத விதமாக நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு (helicopters collide) விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Spread the love
Exit mobile version