வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது :
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலைக்குள் தற்காலிகப் புயலாக வலுப்பெறக்கூடும்.
அதன் பின் வலுக் குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கக்கூடும்.
Also Read : நாங்கள் சங்கினா…நீங்கள் யார்? – சீமானின் அட்டாக்கிங் பேச்சு..!!
நாளை (நவ.29] செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (நவ.30] சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழை பெய்யும், இந்த கணிப்பில் என்ற மாற்றமும் இல்லை என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.