தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை பெய்து வருவதன் காரணமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
புழல் ஏரிக்கு நீர்வரத்து 77 கனஅடியில் இருந்து 204 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2682 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறப்பு.
கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 315 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கன அடியாக சரிவு.
Also Read : திடீரென ஏற்பட்ட கோளாறு – ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்..!!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர்வரத்து வரத் தொடங்கியது. நீர் இருப்பு 1502 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறப்பு.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 40.45% நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் – 41.21%
புழல் – 81.27%
பூண்டி – 3.93%
சோழவரம் – 12.02%
கண்ணன்கோட்டை – 63%
கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரகால நீர் வெளியேற்றும் வழியாக 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.