அமித்ஷாவின் பேச்சை கேட்டு நடக்க தமிழ்நாடு ஒன்றும் தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என ஸ்டாலின் (mk stalin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்து 38வது நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில மொழிகளுக்கு இந்தி(hindi) மொழி போட்டியல்ல. அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே, நாடு அதிகாரம் பெறும்.
தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளுக்கு போட்டியாக இந்தி(hindi) மொழி கொண்டுவருவதாக கூறுவது தவறு.அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் நாடு வலிமை பெறும் என பேசியிருந்தார்.
இந்த நிலையில், அமித்ஷாவின் பேச்சை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின்(mk stalin) ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில்,எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும்.1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.