வரலாற்று ஆசிரியர் பாபாசாகேப் புரந்தரே காலமானார்.

Historian-Padma-Vibhushan-awardee-Babasaheb-Purandare
Historian Padma Vibhushan awardee Babasaheb Purandare

பத்ம விபூஷண் விருது பெற்ற மகாராஷ்டிர எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே இன்று காலமானார்.

கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பாபாசாகேப் புரந்தரே. வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், 2019-ம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றார்.

Historian-Padma-Vibhushan-awardee-Babasaheb-Purandare
Historian Padma Vibhushan awardee Babasaheb Purandare

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட புரந்தரே, புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, புரந்தரேவின் உடல் நிலை நேற்று மேலும் மோசமானதை அடுத்து, இன்று அதிகாலை 5 மணியளவில் தனது 99 வது வயதில் அவர் உயிரிழந்தார்.
புரந்தரேவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts