”சென்னை வரும் அமித்ஷா..”பாஜக-வின் மாஸ்டர் பிளான்…அதிர்ச்சியில் அதிமுக!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா(Amit Shah) நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று சென்னை வருகிறார்.

2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.இந்த தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,முயற்சி செய்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென் சென்னை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாட அமித்ஷா சென்னை வருகிறார்.

இதை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் அமித்ஷா இரவு 8.45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்க உள்ளார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அமித்ஷா செல்கிறார். இரவு அங்கு தங்கிவிட்டு, நாளை காலை அமித்ஷாவை பல்வேறு கட்சியினர் சந்திக்கின்றனர்.

அவர்களுடன் பாஜகவின் 9 ஆண்டு சாதனைகள் பற்றி விவாதிக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காலை 11.25 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பபடும் அமித்ஷா, சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள ராணி மஹாலுக்கு செல்கிறார்.

அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை 1 மணி நேரம் சந்திக்கிறார். பின்னர் வேலூர் சென்று அங்கு நடைபெற்ற பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேச இருப்பதாக தெரிவிக்கபட்டு உள்ளது.

Total
0
Shares
Related Posts