நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரெய்லரில் இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு காந்தி என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தொடக்கத்தில் காந்தி யார் என்பதை பில்டப்புடன் சொல்கிறார் பிரசாந்த்.
அதனை தொடர்ந்து விஜய் தொடர்பான குறும்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் வந்து செல்கின்றன. ஆனால், தொடக்கத்தில் வரும் கிராஃபிக்ஸும், விஜய்யின் இளம் வயது தோற்றமும் செட் ஆகாதது போல உள்ளது.
மொத்த ட்ரெய்லரின் நீளம் 2.51 நிமிடங்கள். அதில் 2 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள். அதன் படி பார்த்தல் சிறந்த ஆக்ஷனைக் கொண்ட படமாக இது இருக்கும் என்பது தெரிகிறது.
ட்ரைலரில் கிட்டத்தட்ட விஜய்யின் முந்தைய படங்களில் பார்த்த ஒரே டெம்ப்ளேட் வகையான காட்சிகள் போர். வெங்கட் பிரபுவிடமிருந்து வெரைட்டியை விரும்பியவர்களுக்கு படத்தில் சர்ப்ரைஸ் இருக்குமா என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க : மது விற்பனையை அதிகரிக்கும் இலக்கு… இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசா..? ராமதாஸ்!
நடிகர் மோகன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது படத்திற்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. முக்கியமாக இதில் வரும் ஒரு பன்ச் டயலாக் கிரிஞ்சாக இருக்கிறது. அதில், “காந்தி வேஷம் போட்டு பாத்திருக்கேன். முதல் தடவ காந்தியே வேஷம் போட்டு பாக்றேன்” போன்ற வசனம் வந்து செல்கிறது.
யுவனின் பின்னணி இசையும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை. “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது” என்ற ‘மங்காத்தா’ பட அஜித் வசனத்தை விஜய் பேசியிருக்கிறார்.
விஜய் நடிக்கும் 68-வது படம் இது. Goat என்பதன் பொருள் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அப்பா மகன் என விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார்.
மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது.