அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் தலைமை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் அது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எப்படி மனுத்தாக்கல் செய்யமுடியும்? – திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டு ஆக.7க்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளது.
முன்னதாக “இணை ஒருங்கிணைப்பாளர் என மனுத்தாக்கல் செய்துவிட்டு தற்போது பொதுச்செயலாளர் என பதில்மனு செய்திருக்கிறார்கள்” எனக்கூறி, அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஐ அறிவித்ததை எதிர்த்து ஒபிஎஸ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதன்பேரில் பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டதற்காக இபிஎஸ் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டதால் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல்.