புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சுழல் இணையத் தொடரின் முதல் சீசனை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.
முதல் சீசனில் நடித்த கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர மிக பெரிய இளம் நட்சத்திரங்கள் இத்தொடரில் நடந்துள்ள நிலையில் தற்போது இத்தொடரின் திரைப்பார்வை குறித்து விவாதிக்கலாம் வாங்க..
காளிப்பட்டிணம் என்ற கடற்கரை ஊரை மையப்படுத்திய கதையாக இந்த சீசன் அமைந்துள்ளது. அங்கு நடக்கும் திருவிழா காலகட்டத்தில் கதை அப்படியே மெல்ல மெல்ல நகர்கிறது. சிறுவயதிலிருந்தே கதிரை எடுத்து வளர்த்து சப் இன்ஸ்பெக்டர் ஆக்கியவர் வழக்கறிஞராக வரும் லால். அங்குள்ள பிரபல வழக்கறிஞராக வளம் வரும் அவர்தான் முதல் சீசனில் கொலை செய்து சிறைக்குச் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷின் வழக்கிற்காக வாதாடி வந்தார் .
Also Read : அதிமுக ஆட்சிக்காலத்தில் மோசடி – 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்..!!
இந்நிலையில் லால் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடைக்க அவரின் மரணத்தை சுற்றியே முழு கதையும் நகர்கிறது . தன்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிய லால் எப்படி இறந்தார் என கதிர் ஸ்தம்பித்துப்போன நிலையில் லாலின் மரண வழக்கு கதிரிடமே வருகிறார்.
இந்த வழக்கை கையில் எடுத்து தீவிரமாக கதிர் விசாரித்த நிரையில் லாலை நாங்கள் தான் கொலை செய்தோம் என 8 இளம் பெண்கள் காவல் நிலையத்தில் சரணடைந்து வழக்கின் திசையை வெவ்வேறு கோணத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
நாளுக்கு நாள் இந்த வழக்கில் குழப்பங்கள் அதிகரிக்க அந்த 8 இளம் பெண்களின் கதைகள் இடையே வந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இறுதியில் லாலின் மரணம் எப்படி நிகழ்ந்தது அந்த 8 பெண்களும் யார் என்பதே இந்த தொடரின் மீதி கதை .
ஆக மொத்தம் முதல் சீசன் போல ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக நகரவில்லை என்றாலும், கடைசி சில மணி நேரங்கள் கதையின் ஆழத்தை காட்டி சிறப்பாக முடிந்துள்ளது.