ஜப்பான் புல்லட் ரயிலுக்கு ‘ட ஃப்’ கொடுத்த’வந்தே பாரத் ரயில்..’ புது அப்டேட்!

வந்தே பாரத் ரயிலை 14 நிமிடங்களில் தூய்மைப்படுத்தும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உட்பட நாட்டின் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

. இந்த ரயில்களில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த ரயிலை தூய்மைப் படுத்த அரை மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால், ஜப்பானில் மக்களை ஏற்றி வந்த ஒரு புல்லட் ரயிலை அடுத்த பயணத்திற்கு வெறும் 7 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்படுகின்றன.

இது “7 நிமிட அதிசயம்” என்று அழைக்கப்படுகிறது. இதே பாணியை இப்போது இந்தியா முயற்சி செய்ய உள்ளது.

இதேபோன்று, இந்தியாவில் 14 நிமிடங்களிலேயே வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் முறையே கோவை மற்றும் நெல்லையில் இருந்து வந்த வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சோதனை அடிப்படையிலான புதிய முயற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts