“Instagram” பக்கத்தை டெலிட் செய்வது எப்படி?

இன்ஸ்டாகிராம் பக்கத்தை (instagram account) ஒருவர் டெலிட் செய்ய வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்? instagram பக்கத்தை ஒருவர் டெலிட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இன்ஸ்டாகிராம் ஆப்பின் மூலம் டெலிட் செய்ய முடியாது.

உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை (instagram account) நீங்கள் டெலிட் செய்ய விரும்பினால் ஒரு கம்ப்யூட்டர் மூலமாகவோ அல்லது மொபைல் பிரௌசர் மூலமாகவோ தான் டெலிட் செய்ய முடியும். அப்படியும் இல்லை என்றால் ஐபோனில் இருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக அதனை டெலிட் செய்யலாம்.

உங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை நீங்கள் தற்காலிகமாக டெலிட் செய்ய வேண்டுமெனில், உங்களுடைய கம்ப்யூட்டரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாகின் செய்துவிட்டு வலது பக்கத்தின் மேலே உள்ள உங்களுடைய புகைப்படத்தை கிளிக் செய்ய வேண்டும்.

அது உங்களின் ப்ரொபைலினுள் சென்றதற்கு பின், கீழே ஸ்க்ரோல் செய்து பார்க்கும் பொழுது தற்காலிகமாக உங்களுடைய கணக்கை நீக்கம் செய்ய ‘தற்காலிகமாக நீக்கம் செய்ய’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர், நீங்கள் எதற்காக உங்களுடைய அக்கவுண்ட்டை தற்காலிகமாக நீக்கம் செய்கிறீர்கள் என்ற காரணத்தை செலக்ட் செய்து பிறகு உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் டைப் செய்வதன் மூலமாக உங்களுடைய அக்கவுண்ட் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும்.

மேலும் நிரந்தரமாக உங்களுடைய அக்கவுண்டை டெலிட் செய்ய வேண்டுமெனில், அதில் இருக்கும் ‘நிரந்தரமாக டெலிட் செய்ய’ என்ற ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்வதன் மூலமாக நிரந்தரமாக உங்களின் அக்கவுண்ட் டெலிட் செய்யப்படும்.

உங்களுடைய அக்கவுண்டை நீங்கள் டெலிட் செய்தாலும், உங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் நீங்கள் மறுபடியும் லாகின் செய்தால் உங்களுடைய அக்கவுண்ட்டை நீங்கள் மீண்டும் பயன்படுத்தலாம்.

ஒரு மாத இடைவெளியில் உங்களுடைய பதிவுகளையும், கணக்குகளையும் யாராலும் பார்க்க முடியாது. அதற்குள் மறுபடியும் நீங்கள் லாகின் செய்யாத பட்சத்தில் தான் உங்கள் அக்கவுன்ட் மொத்தமாக டெலிட் செய்யப்படும்.

Total
0
Shares
Related Posts