சைபர் குற்றங்களுக்கான புகாரை பதிவு செய்வதற்கு என அரசு மூலமாக அமைக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் போர்ட்டலை நீங்கள் பயன்படுத்தலாம்.
புகார் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
சைபர் குற்றங்களை பொறுத்தவரை தற்போதைய காலகட்டத்தில் அவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
அனுமதியில்லாமல் படங்களை பகிர்வது, ஆன்லைன் பண திருட்டு, வேலைபெற்று தருவதாக ஏமாற்றுதல் என ஆன்லைன் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஆனால், இந்த ஆன்லைன் குற்றங்களுக்கான புகார் அளிப்பது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எப்படி சைபர் குற்றங்களுக்கான புகாரை பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான ஆவணங்கள்
எழுத்துபூர்வ புகார்
அடையாளச் சான்று
குடியிருப்பு சான்று
மின்னஞ்சல்களின் நகல் (ஃபார்வர்டு செய்யப்பட்ட அஞ்சல்கள் தவிர்க்கப்பட வேண்டும்)
கூறப்படும் பரிவர்த்தனை/குற்றத்தின் விவரங்களைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டின் பிரின்ட்அவுட்.
URL ஐக் காட்டும் பிரின்ட் அவுட்
திருடப்பட்ட தரவுகளின் நகல்
புகாருக்கு நம்பகமான தொகையைக் காட்ட, அசல் வங்கி அறிக்கை.
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையின் எஸ்எம்எஸ்
சிடி அல்லது USB டிரைவில் மேலே உள்ள ஆன்லைன் விவரங்களின் ஸ்கேன் copy .
சுய அறிவிப்பு (Self declaration)
ஆதார் அட்டை
ஆன்லைன் புகாரில் பதிவு செய்வது :
சைபர் குற்றங்களுக்கான புகாரை பதிவு செய்வதற்கு என அரசு மூலமாக அமைக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் போர்ட்டலை உங்களுடைய கணினி அல்லது லேப்டாப் வாயிலாக திறந்து கொள்ளவும்.
திறக்கும் பக்கத்தில், `Report Other Cyber Crime’ (பிற சைபர் கிரைம் அறிக்கை) என்ற பகுதியை க்ளிக் செய்யவும்.
அடுத்து புதிதாக ஒரு பக்கம் திறக்கும். அந்த பக்கத்தில் `File a complaint’ என்ற இடத்தை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
தொடர்ந்து திறக்கும் பக்கத்தில் சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருக்கும் (instructions). அவற்றை படித்து உள்வாங்கிய பின் `I Accept’ என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
இங்கே உங்கள் புகாரை பதிவு செய்வதற்கான பக்கம் திறக்கும். இதில் `Citizen Login’ என்ற பக்கத்தை திறக்கவும்.
இங்கு உங்களுடைய சில தனிப்பட்ட தகவல்களை நிரப்பிய பின், உங்களுடைய தொலைபேசி எண்ணையும் சேர்த்து கொடுத்தால், உங்களுடைய எண்ணிற்கு OTP வரும்.
அதனை உள்ளிடும் பட்சத்தில் உங்களுடைய புகாரை பதிவு செய்வதற்கான பக்கம் ஒன்று திறக்கும்.
ஆன்லைன் மோசடி :
இதில் `report and track’ என்று இருக்கும் பக்கத்தை தேர்வு செய்து உள்ளே சென்று, உங்களுடைய புகாரின் முழுத் தகவல்களையும், அதாவது சம்பவ விவரங்கள், சந்தேக நபர் விவரங்கள், புகார் விவரங்கள் போன்ற பிரிவுகளில் ஒன்றன்பின் ஒன்றாக கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின் preview and submit’ என்ற பகுதியை க்ளிக் செய்யவும். இங்கு நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று கவனமாக செக் செய்து கொள்ளவும். அதன்பின்
I Agree’ என்ற பகுதியை க்ளிக் செய்து பின் `Confirm & Submit’ என்ற பகுதியை க்ளிக் செய்து கொள்ளவும்.
தற்போது `acknowledgement’ எண் ஒன்று காட்டப்படும். அதனை சேமித்து வைத்துக் கொள்ளவும். தொடர்ந்து உங்களுடைய புகாருக்கான PDF காட்டப்படும்; அதனை டவுன்லோடு செய்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து, உங்களுடைய புகார் சம்பந்தப்பட்ட அதிகாரி மூலம் பரிசீலனை செய்யப்பட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
ஆப்லைன் மூலமாக புகார் செய்வது :
சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் உங்கள் புகாரின் முழு சம்பவத்தையும் விவரிக்கும் புகாரை எழுத வேண்டும், பிரச்னையின் விவரங்களை தெளிவாக, முழுவதாக எழுதவும்.
இந்த புகாரை எடுத்துக்கொண்டு உங்களுக்கு அருகேயுள்ள சைபர் க்ரைம் பிரிவுக்குச் செல்லவும். அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்லவும்.
காவல் நிலையத்தில் உங்களுடைய புகாரின் மேல், zero FIR பதிவு செய்யப்படும். தொடர்ந்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் போர்ட்டலின் ஸ்கிரீன் ஷாட், URL மற்றும் தேவையான பிற ஆவணங்களுடன் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.
புகாரைப் பெற்று பதிவு செய்வதற்கு முன்பு, அதிகாரிகள் புகார் குறித்த தங்களுடைய சந்தேகங்களை உங்களிடம் விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்வார்கள்.
சமர்ப்பிக்கப்பட்ட புகார் விவரமாக, தெளிவாக இருந்தால், மற்றும் ஆதார ஆவணங்கள் இருந்தால், புகார் சம்பந்தப்பட்ட அதிகாரியால் பதிவு செய்யப்படும்.
பதிவு செய்யப்பட்ட புகாருக்கு பாதிக்கப்பட்டவர் FIR எண் கொடுக்கப்படும். அதனை எதிர்கால குறிப்புக்காக பாதுகாப்பாக வைத்திருங்கள்.
தொடர்ந்து உங்களுடைய புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.