தெலுங்கானாவில் மனைவியை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் வைத்த கணவனின் கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரான குருமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது . மனைவியின் நடத்தை மீது அழுத்தமான சந்தேகம் கொண்ட குருமூர்த்தி இதுகுறித்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதேபோல் ஒருநாள் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், கோபத்தின் உச்சிக்கு சென்ற கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலை வழக்கில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக மனைவியின் உடலை பல துண்டுகளாக வெட்டி அதனை குக்கரில் வைத்து சமைத்துள்ளார். பின்னர் சமைக்கப்பட்ட அந்த உடல் பாகங்களை பையில் போட்டுகொண்டு குளம் இருக்கும் பக்திக்கு சென்றுள்ளார்.
பின்னர் யாரும் இல்லாத நேரம் பார்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துவரப்பட்ட மனைவின் உடல் பாகங்களை குளத்தில் வீசிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தும் குருமூர்த்தி நாடமாகியுள்ளார் . பின்னர் அவர் அளித்த புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்திய போலீசார் ஒருகட்டத்தில் குருமூர்த்தியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் குருமூர்த்தி முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுக்க அவர் மீது போலீசாருக்குசந்தேகம் வலுத்தது இதையடுத்து குருமூர்த்தியிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசரணையில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.