பஞ்சாபி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா ஊழல் குற்றசாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் அட்ர்ய்ற்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் முதன் முறையாக ஆம் ஆத்மி கட்சியில் ஆட்சி பொறுப்பு பெற்று சுகாதார மந்திரியாக இருந்தவர் விஜய் சிங்லா .
இவர் அரசு ஒப்பந்த விண்ணப்பங்களில் 1% லஞ்சம் கேட்டதாக கூறபடுகிறது .இந்த நிலையில் அவர் உடனடியாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இத்தகைய ஊழல் ,லஞ்ச புகார்களை ஏற்று கொள்ள முடியாத நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான்எச்சரிக்கை விடுத்துள்ளார் .
இந்த செயல்களை கண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்களை நினைத்து பெருமை கொள்வதாகவும்,அவரது நேர்மையான செய்யலை கண்டு வியப்படைந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த பரிசு என்றும் அவரை காண அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெருமை கொண்டுள்ளார்