Site icon ITamilTv

ஓடி ஒளியும் அவசியம் எனக்கில்லை எந்த நேரத்திலும் விசாரணைக்கு தயார் – இயக்குநர் அமீர்

ameer

ameer

Spread the love

நான் எங்கும் ஓடி ஒளியவோ, மறைந்து கொள்ளவோ தேவை ஏற்படவில்லை , (ameer) போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன் என நடிகரும் இயக்குனருமான அமீர் தெரிவித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர் தொழுகைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது :

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன்; என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள நேரம் வேண்டும்.

Also Read : https://itamiltv.com/people-ready-to-reject-dmk-congress-pm-modi-speech/

ஜாபர் சாதிக் உடன் பயணித்தவன் என்ற முறையில் என் மீது சந்தேக நிழல் விழுவதில் தவறில்லை; நான் எங்கும் ஓடி ஒளியவோ, மறைந்து கொள்ளவோ தேவை ஏற்படவில்லை; ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாலேயே என்னை குற்றவாளி எனச் சொல்ல முடியாது.

NCB விசாரணை முழுமையாக முடிந்த பிறகு நிச்சயம் ஒரு நாள் (ameer) பேசுவேன் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version