நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் பாலிவுட்டால் தான் ஏமாந்துவிட்டதாக கூறிருப்பவது தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப் படம் இயக்குவதை தாண்டி நடிப்பதிலும் அதீத ஆர்வம் கொண்ட இவர் தமிழ் , மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட்டை வெறுப்பதாகவும் பாலிவுட்டால் தான் ஏமாந்துவிட்டதாவும் அனுராக் காஷ்யப் கூறிருப்பவது தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : நல்ல கிரிக்கெட் விளையாடினால் PR தேவையில்லை – எம்.எஸ்.தோனி
இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறிருப்பதாவது :
நான் மும்பையிலிருந்து வெளியேறி, தென்னிந்தியாவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளேன். பாலிவுட் திரையுலகை நினைத்து அருவருப்பாக உணர்கிறேன். பாலிவுடால் நான் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். இங்கு யாரும் நடிப்பதில் கவனம் செலுத்துவது இல்லை, நட்சத்திரங்களாக மாறவே நினைக்கின்றனர். அவர்களின் மனநிலை எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது என அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.