நாட்டையே உலுக்கிய போதை பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தனக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை என கூறி மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
இதையடுத்து இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் வெளியிட்டிருந்தனர்
Also Read : ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு..!!
பின்னர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது தற்போது டெல்லியில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில் சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜாபர் சாதிக் கொடுத்துள்ள மனுவில் தனக்கும் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை எனவும் என் மீது பாய்ந்துள்ள கைது நடவடிக்கையை ரத்து செய்ய கோரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.