ITamilTv

இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன் – ஞானவேல் ராஜா அறிக்கை..!!

Spread the love

நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் இயக்குநர் அமீரின் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிஇருந்தார். இதற்கு சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதிராஜா, சுதா கொங்கரா,பொன்வண்ணன், கவிஞர் சினேகன் உள்பட திரையுலகை சார்ந்த பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், தன்னுடைய வார்த்தைகள் புண்படுத்தும்படி இருந்திருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல் ராஜா விளக்கம் அளித்து உள்ளார் .

இதுகுறித்து ஞானவேல் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை . என்றைக்குமே “அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன் ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் நான்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது . அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version