விரைவில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயாவுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய சீமான் கூறியதாவது :
என் வீட்டையும் காட்டையும் அடமானம் வைப்பேன். இனமானம், தன்மானத்தை வைக்க மாட்டேன். பல சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் 36 லட்சம் வாக்குகளை தனி ஒருவனாக பெற்றிருக்கிறேன். இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் 2026ல் அபிநயா தான் விக்கிரவாண்டி வேட்பாளர்.
Also Read : சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இந்த தேர்தலில் நாம் தமிழர், திமுக இடையேதான் தான் போட்டி. இந்த தேர்தலில் திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி. நாட்டை ஆளும் பாஜக ஏன் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்தியாவிலேயே 1.1 விழுக்காடு வாக்கு வாங்கிய கட்சி தொடர்ந்து முன்னேறி 8.19 விழுக்காடு வாக்கு வாங்கி முன்னேறி வந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பனம்பால், தென்னம்பால் விற்பனை செய்யப்படும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தடை உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.